Published 23 days ago • loading... • Updated 23 days ago
'எங்கள் தலைமை விரும்புதோ இல்லையோ...'- துரை வைகோ அதிரடி பேட்டி
Summary
கோவை விமான நிலையத்தில் இன்று (04/06/2026) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ பேசுகையில்,''எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த இயக்கத்தின் சின்னத்தில் நிற்பது தான் ஜனநாயகம். நாங்கள் பத்து வருடமாக திமுக கூட்டணியில் தொடர்கிறோம். எந்த காரணத்துக்காக கூட்டணிக்கு சென்றமோ அதே காரணத்திற்காக தொடர்ந்து இருக்கிறோம். நாங்கள் எங்கள் சின்னத்தில் போட்டியிட தான் விருப்பம். ஆனால் தேர்தல் நேரத்தில் கடைசி நேரத்தில் நாங்கள் பிடிவாதமாக எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என இருந்து, இது ஒரு சர்ச்சையாகி ஒருவேளை கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் வெளியே வந்தால் அது இறுதி நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த சர்ச்சை வர வேண்டாம், கூட்டணி தலைமைக்கு கஷ்டம் உருவாக்க வேண்டாம் என்ற அடிப்படையில் தான் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எங்கள் நிர்வாகிகளின் மனவேதனையை எங்களுடைய துரதிஷ்டம் என்று சொன்னேன். இதை நான் தவறு என்று கண்டிப்பாக சொல்லவே மாட்டேன்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.