Published 1 day ago • loading... • Updated 1 day ago
''என்கிட்ட காசு இல்லப்பா... ஓபிஎஸ்க்கு திமுக எவ்வளவு கொடுத்தது?''-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
Summary
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் இன்று (19/09/2026) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''தங்கத்தை பார்த்து இருப்பீர்கள் வைரத்தை பார்த்திருப்பீர்கள் மரகதத்தை பார்த்திருக்கவே முடியாது. ஆனால் அவர் பெயரையே மரகதம் என வைத்திருக்கிறார். அவருக்கு மரகதம் என பெயர் வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள் ஜெயலலிதா வைத்த பெயர் அது. சாரி எம்ஜிஆர் வைத்த பெயர் அது. அவரை கண்டெடுத்தது யார் ஜெயலலிதா. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இவரை எதிர்த்து யார் நிற்கிறார்கள் என்றால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள். மதுராந்தகம் தொகுதியில் நிற்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்த வேட்பாளர் யார் தெரியுமா அதிமுகவில் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான். இதற்கு மேல் என்ன எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை அறிவிக்கிறார் என்று தெரியவில்லை.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.