Published 8 hours ago • loading... • Updated 8 hours ago
''லஞ்சம் கேட்டு வாக்குவாதம்'-கூண்டோடு ஆயுதப்படைக்கு மாற்றம்
Summary
லஞ்சம் கேட்டு வாக்குவாதம் செய்த காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி ஷஹ்னாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுப்பவர்களிடம் சுமார் 15,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்டு வாக்குவாதம் செய்த கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் கலையரசி, தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் அனுமதியுடன் மண் எடுத்து வரும் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி-யிடம் நேரில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் கலையரசி, தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஷஹ்னாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.