Published 8 days ago • loading... • Updated 8 days ago
''விஜய்க்கு எதுனா ஆச்சுன்னா நாங்கள் பொறுப்பல்ல''- எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்
Summary
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். அவர் பேசுகையில், அண்ணன் எப்போது காலியாவன், திண்ணை எப்போது வரும் என்ற நினைப்பிலே இன்றைக்கு எத்தனையோ இளம் சிங்கங்கள், தங்கங்கள் ஆர்வத்தோடு இந்த இயக்கத்திலே உழைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக கொள்கையை இன்னைக்கு தூக்கி பிடிக்கிற ஒரு வாய்ப்பு. இவர்கள் எல்லாம் அந்த இடத்தை காலி செய்ததுனாலே கிடைக்கிறதா? என்பதெல்லாம், ஒரு விவாதமாக இருக்கிறது. ஆனால் மொத்தத்தில் நம்மள பார்த்து சில சில்ற பயலுக இன்னைக்கு சிரிப்பா சிரிக்கிறானுங்க. நாங்க தோத்துதான் போயிட்டோமே தவிர செத்து போகவில்லை. தம்பிகளா புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கையில நாங்கள் எத்தனையோ இழந்திருக்கிறோம். உங்களையும் பார்ப்போம். எத்தனை விஜய் வந்தாலும் நாங்க பார்ப்போம்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.