தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, எடப்பாடி பழனிசாமி தவெகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ''தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது. நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும். நமது மாவட்டச் செயலாளர் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்தத் தறிகெட்ட ஆட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று சொந்தமாக ஜெனரேட்டர் வசதி செய்து வைத்துள்ளார். மக்கள் நிம்மதி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கச் சென்ற இடத்தில் கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.