Published 9 days ago • loading... • Updated 9 days ago
'திமுக இனி கரைசேர முடியாது..'-அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேட்டி
Summary
சிதம்பரத்தில் மூடியிருக்கும் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். திமுக இனி கரை சேர முடியாது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ''சிதம்பரம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள ஐயா எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம், திறக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத்தலைவரும், நந்தனார் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. விரைவில் நினைவரங்கத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த முறை சிதம்பரத்திற்கு வந்தபோது, நந்தனார் கல்விக்கழகம் சார்பில் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.