Published 6 days ago • loading... • Updated 6 days ago
'எம்.ஜி.ஆர் போல விஜய் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது'-எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
Summary
கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய முக்கிய நிர்வாகியுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் டிசம்பருக்குள் கரூருக்கு இடைத்தேர்தல் நடக்கும் என தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, ''எதிர்காலத்தில் எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தாலும் முதலமைச்சர் விஜய்யை எந்தவொரு கொம்பனாலும் அசைக்கவோ அல்லது ஆட்சியை விட்டு அகற்றவோ முடியாது. கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை எப்படித் தமிழகத்தின் முதலமைச்சராகத் தொடர்ந்து நீடித்தாரோ, அதேபோலத் தான் தற்போதைய முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை தமிழகத்தின் அரசியல் அதிகாரம் என்பது யாராலும் மாற்ற முடியாத ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, மேலும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போது அந்த வழக்குகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.