Published 4 days ago • loading... • Updated 4 days ago
பழனி கோவில் நில சர்ச்சை! அன்வர்தீன் மர்ம மரணம்!
Summary
"உண்மையைக் கூறுங்கள். இங்கிருந்து கஷ்டப்பட வேண்டுமா? உண்மையைக் கூறினால் வீட்டிற்கு அனுப்புவோம்" என சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நம்பிக்கை வார்த்தைகள் கொடுத்துவிட்டு மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பிய நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் துறந்திருக்கிறார் பழனி கோவில் நில மோசடியின் முதன்மைக்குற்றவாளியான அன்வர்தீன். "இவரோடு இந்த வழக்கை முடித்து விடலாம் என்றெண்ணி அவருக்கு மன அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த இறப்பு ஏற்பட்டிருக்கலாம்'' என்கின்ற தகவல் பரவ மீண்டும் விஸ்வரூப மெடுத்துள்ளது விவகாரம். பழனி கோவில் விவகாரத்தில், ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரை மட்டும் கைது செய்தனர். வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கும் பொருட்டு கைது செய்யப்பட்ட வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் உள்ளிட்ட 4 நபர்களை கடந்த 5ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மட்டும் கஸ்டடிக்கு எடுத்தது சி.பி.சி.ஐ.டி. கஸ்டடியிலிருந்து திரும்பிய நாளில் இரவு 10.30 மணியளவில் நெஞ்சுவலியால் அன்வர்தீனின் உயிர் பிரிந்தது.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.