Published 6 days ago • loading... • Updated 6 days ago
'வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை; காய்கறி விலை உயரும் அபாயம்'-எச்சரிக்கும் புதுமடம் ஹலீம்
Summary
தமிழகத்தின் பிரதான வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற விவாதங்களை தவெக அரசு கையில் எடுத்துள்ளதாக புதுமடம் ஹலீம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு அரசியல் விமர்சகர் புதுமடம் ஹலீம் அளித்த பேட்டியில் இதுகுறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,''தவெக அரசு தொகுதி மறுவரையறைப் பிரச்சனையை ஒரு நாடகமாகச் செயல்படுத்துகிறது என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்னைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பிரதான பிரச்சனை காவிரிப் பிரச்சனைதான். நேற்று கூட மேட்டூர் பகுதி விவசாயிகள் கண்ணீர் வடித்து கதறுகிறார்கள். நாங்களெல்லாம் இனி விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குத்தான் போக வேண்டும் போல என்று அவர்கள் வேதனைப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பு மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த திமுக ஆட்சியில் ஐந்து வருஷமும் ஜூன் 12 அன்னைக்கு அணை திறக்கப்பட்டது. அன்றைய முதல்வர் ஸ்டாலின் நேராகப் போய் அணையைத் திறந்து வைத்த காட்சிகளை எல்லாம் நாம் பார்த்தோம்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.