Published 21 days ago • loading... • Updated 21 days ago
விஜய் பாதுகாப்பு அதிகாரியின் சகோதரர் அட்ராசிட்டி! பரமக்குடி பாலிடிக்ஸ்!
Summary
"எங்கள் ஆட்சியில் ஒரேயொரு பவர் சென்டர்தான்... அது நான்தான்'' என்று விஜய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்... ஆனால் எண்ணிக்கையிலடங்காத பவர் சென்டர்கள் த.வெ.க.வில் ஆங்காங்கே இருக்கின்றன என்பதே உண்மை! விஜய் அருகிலுள்ள ஓர் அரசு அதிகாரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், த.வெ.க. கட்சியையும் ஆட்டிப்படைத்து வருகிறார் ஒருவர்! கட்சியில் எவ்விதப் பொறுப் பிலுமில்லாத ஒருவரின் இந்த அட்ராசிட்டிக்கு முதல்வர் விஜய்யின் பாதுகாப்புப்பிரிவு மற்றும் புலனாய்வுத்துறை டி.ஐ.ஜி.யே காரணம்! த.வெ.க.வின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்களாக ராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கில் முறையே மலர்விழி ஜெயபாலாவும், மன்மதனும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு மாவட்டத்திற்கு ராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டமன்றத் தொகுதிகளும், மேற்கு மாவட்டத்திற்கு முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிகளுமாக பிரிக்கப்பட்டது. நடப்பு தேர்தலில் திருவாடனை தவிர்த்த மூன்று தொகுதி களிலும் த.வெ.க. தோல்வியடைந்தது. திருவாடானையில் வெற்றிபெற்ற ராஜீவ், சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.