Published 1 hour ago • loading... • Updated 1 hour ago
கர்நாடகாவில் குறி வைத்து கொல்லப்பட்ட தமிழர்கள்! - காவேரி எதிரொலியா?
Summary
"அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர் களைக் கொன்றிருக்க வேண் டாமே? அவர்கள் யாரை நோக்கிச் சுட்டார்கள்? அவர்கள் வனத்துறை அதிகாரிகளை நோக்கித்தான் சுட்டார்கள் என்றால் வனத்துறை அதிகாரி கள் இன்னார் என அடை யாளப்படுத்துங்கள். அவர்களை கையிலோ, காலிலோ சுட்டிருக்க வேண்டும், ஆனால், கழுத்தில் சுட்டு மூவரையும் கொன்று விட்டீர்கள்'' என, கொலை யுண்ட தமிழர்களுக்காக போராடிவருகின்றனர் மரிய மங்கலம் கிராமம் உள்ளிட்ட ஹனூர் தாலுகா கிராம மக்கள். சுதந்திர தினத்தன்று காலை 5.15 மணி முதல் 5.30 மணிக்குள் கொள்ளேகால் தலைமையிடமாகக்கொண்ட காவேரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியின் ஷாக்யா எல்லைக்குட்பட்ட ஹோலே முரதட்டி காட்டில் (வன எல்லையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில்) காடே அதிரும் வகையில் துப்பாக்கிக்குண்டுகள் முழங்கியிருக்கின்றன. "வன ரோந்து வந்தோம். வரும் வழியில் சந்தேகத்திற்கிடமான நான்கு நபர்கள் அங்கிருந்தனர். என்ன ஏதுவென்று விசாரிக்கும் முன்னரே அவர்களிடமிருந்த துப்பாக்கியிலிருந்து சுடத் தொடங்கினர். எங்களது உயிரைக் காப்பாற்ற தற்காப்பிற்காக நாங்களும் சுட வேண்டியாதாயிற்று.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.